மணிரத்னம் இயக்கும் "கடல்" படத்தின் இசை வரும் டிசம்பர் 15 அன்று வெளியாகவுள்ளது என்ற செய்தி காட்டுத் தீபோல் பரவி வரும் வேளையில், அது குறித்த எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல் உள்ளார் மணி.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமையத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் மணிரத்தினம் இதுவரை கூறவில்லை இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இன்னும் சில காலம் நாம் ரஹ்மானின் இசையில் உருவான இப்படத்தின் இசையை இரசிக்க காத்திருக்க வேண்டும் என்பதே.
அண்மையில் இப்படத்திற்காக ரஹ்மான் இசையமைத்த "நெஞ்சுக்குள்ளே" என்ற பாடல் இணையத்தளம் வாயிலாக பிரபலமடைந்து வருவதால், இப்படத்திற்காக அவர் இசையமைத்த ஒட்டுமொத்த பாடலையும் கேட்கும் ஆர்வம் அனைத்து ரஹ்மான் இரசிகர்களையும் தூண்டியுள்ளது.
"கடல்" படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாகவும், துளசி நாயர் நாயகியாகவும் நடித்துக்கொண்டுள்ளனர். இவர்களுடன் தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர்களுள் இருவரான அர்ஜுன் மற்றும் அரவிந்த சாமி ஆகியோரும் நடித்துக்கொண்டுள்ளனர்.
"கடல்" படம் குறித்த மேலதிக தகவல்களுக்காக அலை செய்திகளின் திரைகடலுடன் இணைந்திருங்கள்.