மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஒரு நாள் விளம்பரத்திற்காக அதிகப்படியான செலவினம் செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியில் ஆளும் மோடி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளின் விளம்பரத்திற்காக 1000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக, கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மோடி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனையின் விளம்பரங்கள் நாட்டிலுள்ள 8,000 திரையரங்குகளில் திரையிடப்பட்டதாகவும், அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும், பத்திரிக்கைகளிலும் வெளியிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் டெல்லியில் உள்ள அனைத்து அரசு துறைகளும், விளம்பரத்திற்காக ஒரு ஆண்டிற்கு 150 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்வதாக ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மோடியின் அரசின் விளம்பர செலவு குறித்து தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தப்படுமா என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.