தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்நலக்குழு சார்பில் மகாத்மா காந்தியின்150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையன்று கன்னியா குமரி யில் மக்கள் ஒற்றுமை உறுதி யேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் ஜி.சுப்பிரமணியம், மாநில பொருளாளர் எம்.அகமது உசேன், மாவட்ட நிர்வாகிகள் விஜயமோகனன், எஸ்.அந்தோணி, சுதந்திர போராட்ட வீரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா, மூத்த வழக்கறிஞர் ஜி.செலஸ்டின், பேராசிரியர் கணேசன்,கே.தங்கமோகன் ஆகியோர் உரையாற்றினர். மு.சம்சுதீன் நன்றி கூறினார்.
இதில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகி என்.எஸ்.கண்ணன், மோகன், பெஞ்சமின், லட் சுமி, எ.எம்.வி.டெல்பின் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.