திருப்பூர் காந்தி நகர் பகுதியில் மகாத்மா காந்தியின் அஸ்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு, காந்தியின் 150 வது பிறந்தநாளையொட்டி காந்தியின் வேடம் அணிந்து தமிழ்நாடு பாலர் மைய குழந்தைகள் அஞ்சலி செலுத்தினர். கைத்தறி இயந்திரம், மற்றும் ராட்டை, பிரிண்டிங் இயந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டு அதனை பற்றி விளக்கம் கேட்டறிந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் காந்தி வேடம் அணிந்து வந்தது காண்போரைக் கவர்ந்தது.