மஹாராஸ்டிராவில் குடும்பத்தினர் பணம் கேட்டு தொந்தரவு செய்த காரணத்தால், பெண் ஒருவர் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிரியங்கா என்ற 28 வயது பெண்ணின் கணவர் வீட்டில், அவரிடம் பணம் கேட்டு கணவரின் குடும்பத்தினர் தொடர் தொல்லை அளித்து வந்துள்ளனர்.
இதனால் துன்பமடைந்த பிரியங்கா செய்வதறியாது திகைத்துள்ளார். இந்நிலையில், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர், திங்களன்று தனது 2 மகன்கள் மற்றும் மகளை அருகில் இருந்த கிணற்றில் வீசி கொன்றுள்ளார்.
பின்னர் தானும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது இது தொடர்பாக பொலிசார் அந்த பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியாரை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக சிறையில் அடைத்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட பிரியங்கா மற்றும் இறந்த குழந்தைகளின் உடல்கள் அனைத்துக்கும் ஒன்றாக இறுதிச் சடங்கு செவ்வாய்க் கிழமை அன்று நடந்துள்ளது.