'பிச்சைக்காரன்' படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து விஜய் ஆண்டனியின் அடுத்த படமான 'சைத்தான்' ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடிக்கும் விஜய் ஆண்டனிக்கு அருந்ததி நாயர் என்னும் புதுமுக நாயகி ஜோடியாக நடிக்கிறார்.
படத்தில் மேலும், அலிஷா அப்துல்லா மற்றும் மீரா கிருஷ்ணன் என இரண்டு நாயகிகள் உள்ளனர். வரும் ஜூலையில் வெளியாக உள்ள இந்த படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளிவந்தது.