"பீட்சா" படத்தை அண்மையில் பார்த்த நடிகை சமந்தா, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இப்படம் குறித்த தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இம்மாதிரியான ஒரு சிறந்த படத்தை பார்க்கும் ஒரு வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும்,திகில் நிறைந்த வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக இது அமைந்திருந்ததாகவும் சமந்தா கூறியுள்ளார்.
இப்படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் பாராட்டியுள்ள சமந்தா,இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுபராஜ், நாயகன் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கு தன்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார்.
இம்மாதிரியான ஒரு படம் வெளிவந்த தமிழ் சினிமாவில் தானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"பீட்சா" அது வெளிவந்த காலம் முதல் இன்றுவரை சிறந்த முறையில் திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.