ஆந்திரா, தெலுங்கானாவில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்தியது. ஆந்திராவில் வெயிலின் தாக்கத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
தெலுங்கானாவில் கடந்த 21 ம் தேதி வரை 315 பேர் பலியானதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளனர்.
வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் மக்கள் மிகவும் அவதிக் குள்ளாவதோடு 2 மாநிலத்திலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனல்காற்றுக்கு ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 10 பேர் பலியானார்கள்.