கர்நாடகாவில் அமைந்துள்ள மைசூர் அரண்மனை பல்வேறு கலை அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இது உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக கவர்கிறது.
பாதுகாப்பு கருதி அரண்மனையை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
அதில், குறிப்பாக அரண்மனைக்குள் யாரும் புகைப்படம் எடுக்ககூடாது, இந்நிலையில் அங்குள்ள கல்யாண மண்டபமான தர்பார் ஹாலில், ஆதித்யா- நவ்யா என்ற இளம் ஜோடியினர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அரண்மனையில் பாதுகாப்பு குளறுபடி காரணமாக இவ்வாறு நடந்துள்ளது என பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் இது இராஜகுடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இதுகுறித்து விசாரணை நடத்த மைசூர் மண்டல தலைவி சி.சிகா உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து ராஜமாதா பிரமோதாதேவி கூறும் போது, அரண்மனையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு உள்ளது கண்டு வருத்தம் அடைகிறோம். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.