Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாஜகவில் இருந்து மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி தற்காலிகமாக நீக்கம்

பாஜகவில் இருந்து மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தன்னை நீக்கும் தைரியம் யாருக்கும் கிடையாது என்று அக்கட்சியின் மூத்த தலைவரான ராம் ஜெத்மலானி தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்கரி பதவி விலக வேண்டும் என்று ராம் ஜெத்மலானி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டது.

சிபிஐயின் புதிய இயக்குநர் நியமனம் குறித்து பாரதிய ஜனதா கேள்வி எழுப்புவது தவறு என்றும் ராம்ஜெத்மலானி கருத்து தெரிவித்திருந்தார். மேலும், இது தொடர்பாக கட்சித் தலைவர் நிதின் கட்கரிக்கு அவர் எழுதிய கடிதத்தில், சிபிஐயின் புதிய இயக்குநர் நியமனம் தொடர்பாக, மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் சரியானதுதான் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜகவில் இருந்து மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் ராம் ஜெத்மலானி கூறிய கருத்து கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. ஜெத்மலானி நீக்கம் பற்றி பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற குழு நாளை கூடி ஆலோசிக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post