தமிழக சட்டமன்றத்தில் மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த 232 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 98 தொகுதிகளை கைப்பற்றி, தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
நேற்று சட்டமன்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின்;
இதுவரை தமிழக வரலாற்றிலேயே எதிர்க்கட்சி இவ்வளவு பெரும்பன்மை தொகுதிகளை வென்று அமர்ந்ததாக வரலாறு இல்லை.
இந்த சூழ்நிலையில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய திமுக அதை பயன்படுத்திக் கொண்டு நாட்டிற்கு என்னென்ன தேவையோ அதை மையமாக வைத்து எங்களுடைய கருத்துகள் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் என கூறியுள்ளார்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்றம் வர சிறப்பு இருக்கை ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிமுகவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.