Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விவசாயிகள் மீது தாக்குதல்; கண்ணீர் புகைக் குண்டு வீச்சு தில்லி போலீஸ் வெறியாட்டம்

விளை பொருட்களுக்கு உரியவிலை கேட்டு தில்லி மாநகரத்திற்குள்நுழைய முயன்ற உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக் கான விவசாயிகள் மீது மோடி அரசு காவல்துறையை ஏவி கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. இத்தாக்குதலை அகில இந்திய விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. விவசாய விளைப் பொருட் களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மின்கட்ட ணத்தை குறைக்க வேண்டும். பெட் ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உத்தர்கண்ட் மாநில விவசாயிகள் டிராக்டர்கள், பேருந்துகள், சிறு வாகனங் களில் தில்லியை நோக்கி பேரணி யாக வந்தனர்.கிஷான்கிரந்தி யாத்திரா என்ற பெயரில் செப்டம்பர் 23ஆம் தேதி ஹரித்துவாரில் புறப்பட்ட பாரதிய கிஷான் யூனியன் தலைமையிலான விவசாயிகளுடன் வழிநெடுகிலும் ஏராளமான விவசாயிகள் இணைந்து கொண்டனர். தில்லியை நெருங்கும் போது பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் திரண்டனர். அக்டோபர் 2 அன்றுதலைநகர் தில்லியில் உள்ள கிஷான்கட்பகுதியில் போராட்டம் நடத்த முடிவு செய்து வந்த விவசாயிகளை, உத்தரப் பிரதேசம் - தில்லி எல்லையில் அமைந்துள்ள காஸிப்பூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லிகாவல்துறையினர் தடுத்து நிறுத்தி கண்ணீர்புகைக்குண்டுகளை வீசி,அவர்கள் மீது கொடூரமான தாக்கு தலை கட்டவிழ்த்துவிட்டனர். தடியடிதாக்குதல் தண்ணீர் பீய்ச்சி அடித்தல்என பல்வேறு வழிகளில் விவசாயிகளின் யாத்திரை மீது காவல்துறை யினர் வெறியாட்டம் போட்டனர். இதனால் உ.பி. கேட் என அழைக்கப்படும் காஸிப்பூர் பகுதியின் தேசிய நெடுஞ் சாலை போர்க்களமாக காட்சி அளித்தது. 


 தில்லிக்குள் அனுமதிக்க விடாமல்விவசாயிகளை தடுத்து நிறுத்தியதை எதிர்க்கட்சிகள் வன்மை யாகக் கண்டித்துள்ளன. விவசாயிகள்போராட்டத்திற்கு சமூக வலைத் தளங்களில் ஆதரவு பெருகியுள்ளது. இதற்கிடையே விவசாயிகள் தரப்பிடம்மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர் அளித்த உத்தரவாதத்தை ஏற்க முடியாது என்றும் போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் தெரி வித்துள்ளனர்.இதுதொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா ஆகியோர், “தில்லி மாநகரம், விவசாயி களுக்கு சொந்தமில்லையா? தங்களதுகோரிக்கைகளை அரசுக்கு தெரி விப்பதற்காக விவசாயிகள் தில்லிக்குள் நுழையக்கூடாதா? அப்படிப்பட்ட மத்திய அரசின் அடக்குமுறையை இந்திய விவசாயிகள் உடைத்து நொறுக்குவார்கள். 2018 நவம்பர் 28 அன்று நாட்டின் மூன்று முனைகளிலிருந்து தில்லி நோக்கி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் விவசாயிகள் விடுதலைப் பேரணி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகள் ஒன்றுதிரண்டு அகிலஇந்திய விவசாயிகள் எழுச்சிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக் கில் விவசாயிகள் தில்லியை முற்றுகையிடுவார்கள். அப்போது மோடி அரசுஎன்ன செய்கிறது என்று பார்ப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post