தெலுங்கானாவின் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாறிக்கு நடுவில் கார் சிக்கி நசுங்கி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நிஜாமாபாத்- ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது,விபத்தின் போது கார் ஓட்டுனர், தான் முன் சென்ற லொறியை முந்திச் சென்று, பைபாஸ் சாலை வளைவில் நுழைய முயன்றுள்ளார். எனினும் காரின் பின் பகுதி லாறியில் இடித்து இழுத்து சென்றுள்ளது.
இதன்போது எதிர்சாலையில் வந்த மற்றொரு லாறி காரை மோதியுள்ளது, இதில் கார் இரண்டு லாறிக்கு நடுவில் சிக்கி நசுங்கியுள்ளது. காரில் பயணித்த ஐந்து பேரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
போலீசார், ஜேசிபி மற்றும் Earthmovers உதவியுடன் உடல்களை மீட்டுள்ளனர். மேலும், குறித்த கொடூர விபத்தின் காட்சிகள் சாலையில் நிறுவப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.