Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

13வது முறையாக பதவியேற்ற கருணாநிதி: சந்திப்பை தவிர்க்க வெளியேறிய ஜெயலலிதா

தமிழகத்தின் 15வது சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று 13வது முறையாக எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார்.
சட்டசபையில் அவர் சக்கர நாற்காலியுடன் சென்று அமர வசதி செய்து தரப்படாததால் கடந்த ஐந்து ஆண்டுகளாக, சட்டசபைக்கு வராமல் இருந்தார். தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சட்டசபைக்கு வந்தார்.
இந்நிலையில் சட்டசபைக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதை தவிர்க்க, முதல்வர் ஜெயலலிதா சபையில் இருந்து வெளியேறினார்.
கருணாநிதி உள்ளே நுழைந்த போது சட்டசபையில் இருந்த ஜெயலலிதா அவரை சந்திப்பதை தவிர்க்க சபாநாயகர் இருக்கை அருகே இருந்த மற்றொரு வாயில் வழியாக வெளியேறினார்.
கருணாநிதி பதவியேற்று சென்ற பிறகும், முதல்வர் ஜெயலலிதா சபைக்கு வரவில்லை. இதனால் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது பதவியேற்க விரும்பிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post