பாலாவின் தாரை தப்பட்டையில் வில்லனாக அறிமுகமான ஆர்.கே. சுரேஷ் ஒரு தயாரிப்பாளரும் கூட. இப்போது தமிழ் சினிமாவுக்கு ஏற்ற வில்லன் இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு மிரட்டித் தள்ளினார்.
விஷாலின் மருது படத்தில் தனது கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து அதிர்ந்து போன சுரேஷ், தனக்கு கிடைக்கும் இந்த வரவேற்பும் புகழும் ஒரு நாளில் வந்ததில்லை, பல வலிகள் தாண்டி கடினமாக உழைத்ததன் விழைவு தான் இது என்று கூறினார். தனக்கு நடிகனாக முகவரி தந்த பாலாவிற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் நெகிழ்ந்தார் சுரேஷ்.