Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம்

விருதுநகர், அக்.2-2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ளநாடாளுமன்றத் தேர்தலையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்கள் ஆகியவை பொறியாளர்களால் சரிபார்க்கும் பணிதிங்களன்று தொடங்கப்பட்டது. விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள இராமநாதபுரம் மாவட்ட ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அந்த அறை பூட்டி சீல்வைக்கப்பட்டது. 

இதையடுத்து, அந்த அறை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமா ர்முன்னிலையில் திறக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டஆட்சித் தலைவர் அ.சிவஞானம் பார்வையிட்டார். பின்பு,வாக்குப் பதிவு இயந்திரங்களை விரைவில் சரிபார்க்கும் பொறியாளர்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி மற்றும் மின் விசிறி, ஏர் கூலர்உள்ளிட்ட வசதிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். 

மேலும், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்திட காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு ஏராளமான காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பார்வையிட, அடையாள அட்டை மற்றும் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post