கொல்கத்தாவுக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் நடந்த கடைசி ஐபிஎல் குருப் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா.
முதலில் பெட் செய்த கொல்கத்தா அணி, யூசுப் பதான் (52) மற்றும் மனிஷ் பாண்டேயின் (48) பொறுப்பான பேட்டிங்கால் 6 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஹைதராபாத், சுனில் நரைனின் சுழலில் திக்கு முக்காடியது.
நரைன் 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுக்க, ஹைதராபாதால் 149/8 மட்டுமே எடுக்க முடிந்தது.