![]() |
அடங்கியது காளை! |
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள டெக்கான் சார்ஜர்ஸை அணியை ஆண்டொன்றுக்கு ரூபாய் 85 கோடிகள் என்ற ஒரு தொகைக்கு சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.
டெக்கன் சார்ஜர்ஸ் அணியின் உரிமைக்காக பிசிசிஐ நடத்திய ஏலத்தில் மிக அதிகமான தொகை கொடுத்து தற்போது சன் டிவி குழுமம் வாங்கியுள்ளது.
டெக்கான் அணியின் முன்னாள் உரிமையாளர்களாக இருந்துவந்த டி சி ஹெச் எல் இந்தியாவின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐக்குசெலுத்த வேண்டிய தொகைகளை அது செலுத்தத் தவறியதால் டெக்கன் சார்ஜர் அணிக்கென அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தை கடந்த செப்டம்பரில் பிசிசிஐ ரத்து செய்ததைத் தொடர்ந்து அந்த அணி ஏலம் விடப்பட்டது.