Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விராத் கோலி மீண்டும் அதிரடி; 2ஆம் இடத்தில் பெங்களூரு

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் விராத் கோலியின் அதிரடி பேட்டிங்கால் தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி, ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றுக்குள் சென்றது. 

8 விக்கெட் இழப்பிற்கு டெல்லி 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த பெங்களூரின் கேப்டன் கோலி 45 பந்துகளில் 54 ரன்கள் எடுக்க, 19வது ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆர்.சி.பி. இதன் மூலம் இந்த ஐபிஎல்லில் 14 போட்டிகளில் 919 ரன்களையும் அவர் எடுத்தார். ரன் ரேட் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்திற்கு சென்ற ஆர்.சி.பி, முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத்தை சந்திக்கும்.
[vuukle-powerbar-top]

Recent Post