இந்த ஆண்டு மாநிலங்கவை உறுப்பினர்கள் 6 பேர் பதவி நிறைவு பெறுகிறது. திமுகவுக்கு இரண்டு இடங்களும், அதிமுகவுக்கு நான்கு இடங்களும் உள்ளன. திமுகவுக்குள், வேட்பாளர் யார் என நடந்த மவுன யுத்ததில், ஒரு இடத்திற்கு ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதியையும், ஒரு இடத்திற்கு டி.ஆர்.பாலுவையும் கட்சி மேலிடம் அதாவது மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆனால், கனிமொழி அந்த முடிவையும் மீறி தனது ஆதரவாளர் டி.கே.எஸ். இளங்கோவனை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்று போராடி அவரை அறிவிக்கவும் வைத்து விட்டார். இதன் மூலம் கட்சிக்குள் கனிமொழியின் பிடி வலுவாகி வருவது தெரிகிறது.