நத்தம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நத்தம் பகுதி வேலப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்ற சிறுமி கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யபட்டது.இதனால் சிறுமி அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி அக்ஷயா பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் டெங்குவை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.