கமல் ஹாசன் இயக்கி நடித்து வரும் "விஸ்வரூபம்" படத்தை தன் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான "ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்னஷ்னல்" ஊடாகவே விநியோகிக்க கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
ஏற்கனவே அறிவித்ததை போலவே ஜனவரி 11 ஆம் தேதி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இப்படத்திற்கான தொலைக்காட்சி உரிமையை கூட அதே தேதியில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியானபோதும் பின்னர் அது வதந்தி என தெரிய வந்துள்ளது.
இப்படத்திற்கான இந்தி மற்றும் தெலுகு பதிவுகளுக்கான விநியோகம் தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.ஆயினும் "விஸ்வரூபம்" படத்தின் இசையானது வரும் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.