விண்ணுக்கு சென்று பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்பும் ஆர்.எல்.வி. - டி.டி. என்ற பெயரில் ரூ.95 கோடியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கிய ராக்கெட், சோதனைக்காக இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.
70 கி.மீ பயணம் செய்து, பின்னர் வங்கக் கடலில் வெற்றிகரமாக விழுந்த இந்த ராக்கெட்டின் சோதனை முயற்சி இஸ்ரோவின் சாதனையின் மற்றொரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்