தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று 6 ஆவது முறையாக பதவி யேற்கவுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ள கோலாகல விழாவில், கவர்னர் ரோசைய்யா ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார். அதனை தொடர்ந்து, 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொள்வார்கள்.
இந்த விழாவிற்காக மத்திய அமைச்சர்களுக்கும், மாநில அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.