காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் இன்று போரட்டம் நடைபெற உள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாவட்டம் மாண்டியாவில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. காவிரி நீர் பாதுகாப்பு குழு என்ற அமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.மேலும் இந்தக் குழு கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிடப் போகதாகவும் அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் பல அமைப்புகளும் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.