காவிரியில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம்கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின்உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாமாநிலம் மாண்டியாவில் இன்று காவிரிபாதுகாப்பு கமிட்டி முழு அடைப்பு நடத்துகிறது.
மாண்டியா மாவட்ட விவசாயிகள் தண்ணீர்இன்றி தவித்து வருவதாக கூறியுள்ள அந்தகமிட்டியின் தலைவர் மாதே கவுடா, நீதிமன்றதீர்ப்பை எவ்வாறு ஏற்க முடியும் என்றும்கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜ்ய ரிதா சங்கம் என்ற மற்றொரு கன்னட அமைப்பும் உச்சநீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்துள்ளது. மேலும், தமிழகத்திற்கு தண்ணீர்வழங்கப்படுமானால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அந்தஅமைப்பு தெரிவித்துள்ளது.
இத்தகைய போராட்ட அறிவிப்புகள் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்டஅணைப்பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தக்கூடாதுஎன அந்த மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.