கேரளாவில் இருந்து இடிந்தகரைக்கு வருகை தந்த கூடங்குளம் அணு உலை எதிர்பாளர்கள் திரும்பிச்செல்லும் போது காவல்துறையினர் கைது செய்து பழவூர் எனும் கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த குழுவில் ஆண்களும் மற்றும் பெண்களும் ஆக 25 பேர் இருந்தனர்.
இதில் 25 பேரும் கைதாகி நீண்ட நேர விசாரணைக்கு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.