
தலைநகர் கால்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காவல்துறையினர் மீது கற்களை எறிந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதிபர் முகமது முர்சி, தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி எகிப்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் அதிபர் தனக்கு தானே வழங்கி கொண்ட அதிகாரங்களை திரும்ப பெற வேண்டும் என முக்கிய எதிர்க்கட்சி தலைவரான மொகமது எல்பாரடேல் கூறியுள்ளார்.
இந்நிலையில் முர்சியின் கட்சியான இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி அதிபருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் செவ்வாய்கிழமை கால்ரோவில் பேரணி நடத்துவதாக தெரிவித்துள்ளது.
அதே நாளில் அதிபரின் எதிர்ப்பாளர்களும் தாரிர் சதுக்கத்தில் பெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.