
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள கூட்டமைப்பின் விருது வழங்கும் நிகழ்ச்சியில், போல்ட்டுக்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.
இதன்மூலம், 4 முறை சிறந்த தடகள வீரருக்கான விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் உசைன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த அவர், 2008, 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே இந்த விருதை வென்றுள்ளார்.
சிறந்த தடகள வீராங்கனைக்காக விருது அமெரிக்காவின் அல்லிசன் பெலிக்ஸ்-க்கு வழங்கப்பட்டது. ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரருக்கான விருதை 110 மீட்டர் தடை தாண்டும் வீரரான அமெரிக்காவின் ஆரீஸ் மெரிட் வென்றார்.