3-ஜி வசதி கொண்ட நவீன கேலக்ஸி கேமராவை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை நேரடியாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய முடியும்.
29 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பில் இந்த கேமரா விற்பனைக்கு வந்துள்ளதாக சாம்சங் மொபைல் நிறுவனத்தின் துணைத் தலைவர் அசிம் வார்சி தெரிவித்துள்ளார்.
காட்சிகளை படம் பிடிப்பதில் ஆர்வமுள்ளவர்களை குறிவைத்து இந்த புதிய கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் ஆண்டிலேயே பல லட்சம் கேமராக்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்ப்பதாகவும் அசிம் வார்சி கூறியுள்ளார். இந்த கேமராவில் ஆண்ட்ராய்ட் 4.1 இயங்குதள மென்பொருளை பயன்படுத்தலாம். மேலும், புளுடூத் வசதியும் உள்ளது.
அத்துடன் ஸ்மார்ட்போன்-ல் உள்ள அனைத்து வசதிகளும் இந்த புதிய 3-ஜி கேமராவில் உண்டு. இந்த கேமராவில் 16 மெகா பிக்சல் அளவு துல்லியமாக படம் பிடிக்கலாம்.