மாற்றம் வேண்டும் இனி..
இது ஏதோ விஜயகாந்த் மாற வேண்டும் என எழுதப்படும் கட்டுரை என நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
மாற்றம் வேண்டும் என 2006 ல் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் , 2011 ல் 29 சட்டமன்ற உறுப்பினரும் கொடுத்து , அடுத்து விஜயகாந்துக்கு முதல்வர் பதவி கொடுக்க நினைக்கும் மக்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
2005 ஆம் ஆண்டு அவர் கட்சி ஆரம்பித்த புதிதில், திரு. மதன் அவர்களுடன் ஒரு நேர்முக நிகழ்ச்சியில் , அவர் கூறியது ஊழலை ஒழிப்பேன் ,ஒழுக்கத்தை கடைபிடிப்பேன், நல்லாட்சி கொடுப்பேன் , குடும்ப அரசியலை ஒழிப்பேன் , ஏழை மக்களை காப்பேன் என கூறினர்.அதை அவர் காப்பற்றி கொண்டு இருப்பது வெறும் வார்த்தைகளில் மட்டும் தான்.
அரசியல்வாதி ஆவதற்கு, அவர் கூறிய அத்தனை தகுதிகளும் வேண்டும் , ஆனால் இந்த தகுதிகள் எல்லாம் அவரிடம் உண்டா? அவர் திரையில் செய்தது எல்லாம் நிஜத்தில் நடக்கும் என நினைத்தார்கள், நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசங்கள் உள்ளன என அவர் நிருபித்து விட்டார் .
அவருடைய ரசிகர்கள் தான் அவருடைய தொண்டர்கள். அவர் ஊழல் அற்ற, ஒழுக்கமான ஆட்சி நடத்துவதருக்கு எப்புடி பட்ட வேட்பாளர்களை
இவர்களுக்கு அடிப்படை அரசியல் தெரிய வாய்பில்லை, பொது பிரச்சனைகாக போராடிய அனுபவமும் இல்லை.
நிறுத்தி இருக்க வேண்டும் ? சமிபத்தில் கட்சி தாவிய (அப்படியே வைத்து கொள்ளுவோம்) 4 சட்டமன்ற உறுபினர்களை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். ஒருவர் நடிகர், மற்றொருவர் திரைப்பட தயாரிப்பாளர், இன்னொருவர் அவரை போலவே உருவ ஒற்றுமை உள்ள விஜயகாந்தின் வெறி பிடித்த
ரசிகர், கடைசியில் இருப்பவர் விஜயகாந்தின் பினாமி. ஒரு வேலை இவர்கள் ஆட்சி பிடித்து இருந்தால், இவர்கள் இந்த ஒழுக்கத்தையும் , அனுபவத்தையும் வைத்து தான் அமைச்சர்களாக நம்மை ஆண்டு கொண்டு இருப்பார்கள்.
ஊருக்கு தான் உபதேசம் என்பது போல,கருணாநிதி , ராமதாஸ் அவர்களின் குடும்ப அரசியலை ஒழிப்பேன் என்று கூறிய இவருக்கு இந்த வார்த்தை பொருந்தாது போல.தேமுதிக வில் இவருடைய மனைவி மற்றும் மச்சானின் தலையீட்டை யார் இவரிடம் சொல்லுவது. மச்சான் சுதீஷ் ஆவது மாநில இளைஞர் அணி பொறுப்பாளராக உள்ளார், ஆனால் இவருடைய
மனைவி என்ன பொறுப்பில் உள்ளார் என்று யாருக்கும் புரியவில்லை. அவரது மனைவி இல்லாமல் எந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வது இல்லை, அவருக்கு 'அண்ணி' யாரே என்று பட்டம் வேறு.
இந்த குடும்ப அரசியலை யார் ஒழிப்பது?
எப்பொழுதாவது பத்திரிகை சந்திப்பு நடக்கும், பத்திரிகையாளர்கள் யாராவது கேள்வி கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்லாமல் இவர் எதிர் கேள்வி கேட்பது தான் இவரது பாணி. சமிபத்திலே ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நீங்கள் ஏன் சட்டசபைக்கு போவதில்லை என கேள்வி கேட்கப்பட்டது, அவருடைய பதிலை கேட்ட பொழுது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய பதில் இதுதான், 'ஆமா நான்
சட்டசபைக்கு போய்ட்டா அப்படியே ரோடு போட்டுவாங்காள' , சட்டசபை
ஒரு விஷயம் தெளிவாகிறது , விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததே முதல் அமைச்சர் ஆவதற்கு தானே ஒழிய , மக்களுக்கு சேவை செய்வதருக்கு அல்ல.
கருப்பு
எம்ஜிஆர்
என இவர் தன்னை தானே சொல்வதாலும், பொன் மன செம்மல்
எம்ஜிஆர்
போல் திரையில் வசனம் பேசியதாலும் தான் தான் அடுத்த
முதல்வர் என கனவில் இருக்கும் இவர் , எம்ஜிஆர்
போல் பொது வாழ்கையில்
இருக்க மறந்தது ஏனோ?
திரையில் பேசும் வசனம் பேச்சளவில் மட்டும் அல்ல, நிஜத்திலும் அப்படியாய் தான் வாழ்ந்தவர் எம்ஜிஆர் , ஹரிதாஸ் எனும் படம் தொடர்ந்து நான்கு தீபாவளி கண்ட திரைக் காவியம். அதை குறித்து கட்டுரை எழுதுவதற்கு நான் ப்ராட்வே ( இந்த திரை அரங்கில் தான் நான்கு வருடம் ஓடியது) திரை அரங்கு உரிமையாளர் திரு, சுரேஷ் அவர்களை 2008 ஆம் ஆண்டு சந்திதேன். அப்பொழுது உலகம் சுற்றும் வாலிபன்' திரைபடத்தை மறுபடியும் வெளியிட்டு இருந்தார்கள்.
எம்ஜிஆர் பற்றி திரு சுரேஷ் அவர்கள் சில சுவாரசியமான விசயத்தை பகிர்ந்து கொண்டார்.
எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்த நேரம், ஒரு படத்தின் வெற்றி விழா ப்ராட்வே திரை அரங்கில் மதியம் நடப்பாக இருந்தது, ஆனால் வேலை பளு காரணமாக
எம்ஜிஆர் அவர்கள்
3 மணி நேரம் தாமதமாக வந்தார், அவரை
கண்டவுடன் கூட்டம் அலைமோதியது, ஆர்பரித்தது.
அந்த இரைச்சலில்லும் ஒரு ஏழை மூதாட்டியின் நடுக்கமான குரலை கேட்டு அவர் அருகில் செலுகிறார், அந்த மூதாட்டி எம்ஜிஆர் அவர்களிடம் , 'மவராசா உனக்காக நான் சமைச்சி ஒரு கை பிடி சோறு கொண்டு வந்தேன், ஆனா கூட்டத்தில் எல்லாமே கொட்டி போச்சு என்றார், அவ்வளவுதானே என கூறிய எம்ஜிஆர், உடனே மூதாட்டியின் கையில் ஒட்டியிருந்த 2 பருக்கை சோற்றை மூதாட்டியின் கையே வைத்தே ஊட்டி விட வைத்தார்'. இது தான் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் போல் , அரசியல்வாதியான நடிகர்கள் இருப்பார்களா ? வருங்கால அரசியல் கனவுகளோடு இப்பொழுது பொது வாழ்கையில் 'நடித்து' கொண்டு இருக்கும் நடிகர்கள் செய்வார்களா?
இந்திய அளவில் புகழ் பெற்ற சமுக சேவகர் அரவிந்த் கேஜரிவல், ஒரு அணு உலை ஆதரவாளர். ஆனால் கூடங்குளத்தில் காவல் துறை தடியடி நடத்தியபொழுது இடிந்தகரைக்கு வந்து 3 நாட்கள் மக்களோடு மக்களாக தங்கி இருந்து தடியடிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.ஆனால் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக ( இருந்த ) இருக்கும் விஜயகாந்த் , ரோம் நகரம் தீ பற்றி எரிந்தபோது மன்னன் பிடில் வாசித்த கதையாக , தனது குடும்பத்துடன் உல்லாச பயணம் சென்று இருந்தார். நாடு திரும்பியவுடன் தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்க வேண்டும். குறைந்த பட்சம் தனது நிலைபாட்டை தெளிவு (எப்போது தான் அவர் தெளிவாக இருந்தார் என நீங்க கேட்பது எனக்கு கேட்கிறது) படுத்தியிருக்க வேண்டும் , ஆனால் எதுவும் நடக்கவில்லை. இத்தனைக்கும் அரசியலில் மிகவும் அனுபவமிக்க, இப்போது அவரிடம் இருந்து வெளியேறிய திரைப்பட தயாரிப்பாளரின் தொகுதி தான் அது. முன்பு அணுஉலை போராட்டக் குழுவினரை ஆதரித்தவர்களில் விஜய்காந்தும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.
விஜயகாந்தின் இளைய மகனின் பெயர் பிரபாகரன் , தமிழீழ தேசிய தலைவர் நினைவாக தான் இப் பேரை வைத்துள்ளேன் என அவரே வெளிபடையாக கூறியுள்ளார். சில காலம் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடாமல் இருந்தார். அதற்கு அவர் கூறிய காரணம் ஈழ தமிழர்கள் அங்கு கொடுமை அனுபவிக்கும் பொழுது நான் எப்படி பிறந்தநாள் கொண்டாட முடியும் என கூறியவர், இப்போது ஈழ தமிழர்கள் சந்தோஷமான சூழ்நிலையில் உள்ளார்கள் போல் இருக்கிறது அவருக்கு. அதனால் தான் சமிப காலமாக தனது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்.
இவருடைய சமீபகால நடவடிக்கைகள் எல்லாம் யாருக்காக தனது பிறந்த நாளை கொண்டாடாமல் இருந்தாரோ அவர்களை மீளா துயரத்தில் தள்ளிய காங்கிரஸ் கட்சி இருக்கும் திசை நோக்கிதான் உள்ளது.
அவர்கள் துடைக்கப்பட வேண்டியவர்கள் , இவர்கள் தூக்கியடிக்க பட வேண்டியவர்கள், கூட்டணி சரியானது தான்.
சாதாரண மக்கள் பிரபலங்களிடம் நெருங்க முடியாது. மக்களின் பிரச்சனைகள் எல்லாம் நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை நண்பர்கள் மூலமாக மக்கள் தெரியப் படுத்துகிறார்கள். சாதாரண கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை, ' நாயே நீயா எனுக்கு சம்பளம் தர ' என சொன்ன இவர் , நாளை மக்களும் இவரிடம் கேள்வி கேட்டால் இதே பதில் தான் சொல்லுவர் என்பது நிச்சயம்.பத்திரிகையாளர்களை பார்த்து பயப்படாத இவர் மக்களை பார்த்து மிரண்டு விடுவாரா என்ன?
பத்திரிகையாளர்களை கேவலப் படுத்தியதிற்கு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் திரு டீ. எஸ். ஆர். சுபாஷ் அவர்கள் , விஜயகாந்தை எச்சரித்து பேசியதாவது ,
விஜயகாந்த் ஒரு நடிகர், அரசியல்வாதி மட்டும் அல்ல, அவரே ஒரு ஊடகத்தை நடத்தி கொண்டு இருக்கிறார் , நாளை அவருகே எதாவது
பிரச்சனை என்றால் நாங்கள் தான் போராடுவோம். இதுதான் பத்திரிக்கை தருமம், விஜயகாந்த் எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து சென்று போராடுவோம், இதை எல்லாம் கடைபிடிக்காத விஜயகாந்துக்கு அரசியல் ஒரு கேடா, என எச்சரிக்கை விடுத்தார்.
பத்திரிகையாளர்களை நடிகர் விவேக்கை சில காலம் புறக்கணிக்கும் பொழுது அவர் திருந்தி, தான் உண்டு தனது வேலை உண்டு என இருந்து கொண்டு இருக்கிறார். ஆனால் விஜயகாந்த் திருந்தவில்லை என்றால் நாட்டுக்கும் கஷ்டம் , வீட்டுக்கும் கஷ்டம்.
வேறு கட்சி தலைவர்களை இவர் அடிக்கடி ராஜினாமா செய்ய சொல்லும் இவர் , இப்போது தனது 29 சட்டமன்ற உறுப்பினர்கள் , மனிக்கவும் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் ( 5 உறுப்பினர்கள் கட்சி மாற போகுவதாக செய்தி) உடன் ராஜினாமா செய்விர்களா என கேட்டால் இவருடைய பதில் என்னவாக இருக்கும். ''ஆங் ங் ங் ங் ங் ங், கரெக்ட் அதே தான் மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் ராஜினாமா செய்வாங்களா'' என்ற பதில் தான் வரும் .
ஒரு விமர்சனத்தை தங்கி கொள்ள முடியாத இவர், நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் 'நிலையில்' உள்ள இவர், நாளை மக்கள் விமர்சித்தால் நாக்கை 'துருத்தி' கொண்டு படத்தில் பாய்வது போல் மக்களிடத்தில் பாயுவார் போல.
இணையதளத்தில் வாழும் படித்த மக்கள் 'விஜயகாந்தை' புறக்கணித்து பல காலங்கள் ஆகிவிட்டது. அதுபோல் போல் வெகு ஜன மக்களாலும் விஜயகாந்த் புறக்கணிக்க பட வேண்டும். இவரால் தமிழ் திரையில்
ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை நாம் இழந்தது தான் மிச்சம்.
மாற்றம் வேண்டும் , மாற்றம் வேண்டும் , என கூறி தவறான நபர்களுக்கு வழி வகுக்கும் மக்களிடம் , மாற்றம் வேண்டும் இனி .....
- சீனிவாஸ் திவாரி