Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டிசம்பர் 10 இல் சென்னை, குமரி நெடுஞ்சாலை மறியல் போராட்டம் ~ அணுஉலை எதிர்ப்பாளர்கள் அறிவிப்பு

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் வரும் நவம்பர் 21 கடலோரமாவட்டங்களில் உள்ள தலைமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிடுவதாக முன்னதாகவே அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவித்திருந்தது.

அந்தவகையில் இன்று உதயகுமார் மற்றும் தலைவர்கள் தலைமையில் இடிந்தகரையில் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில், உலக மீனவர் தினமான நவம்பர் 21 தமிழக 13 கடலோர மாவட்டங்களில் உள்ள தலைமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிடுவதாகவும் அதே வேளை தங்களுக்கு ஆதரவான கட்சிகள் மற்றும் இயக்கங்களின் உதவியுடன் மற்றைய மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் மற்றும் மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொள்ளும் சாலை மறியல் போராட்டமும்  திட்டமிட்டிருப்பதாக உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.

ஆதரவு இயக்கங்கள் மற்றும் கட்சிகளுடைய தலைவர்கள் கலந்துகொள்கின்ற கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றுகை போராட்டம் திட்டமிட்டிருப்பதாகவும்  அதற்கான தேதியினை தலைவர்களுடன் சேர்ந்து கலந்தாலோசித்ததன் பின்னர் அதற்கான போராட்ட தேதியினை அறிவிப்போம் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சாலை மறியல் போராட்டத்திற்கு அணுஉலைக்கு எதிர்ப்பான உணர்வாளர்களை அழைப்பும் விடுத்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post