அமெரிக்காவில் 50 மாகாணங்களில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஒபாமாவும் குடியரசு கட்சி சார்பில் மிட்ரோம்னியும் களத்தில் உள்ளனர்.அமெரிக்காவில் எலக்டோரல் காலேஜ் முறையில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.இதில் 538 வாக்குகளில் 270 வாக்குகள் பெறுபவர்களே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த நிலையில் தற்போது நிலவரப்படி ரோம்னி முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் ஒபாமாவும் ரோம்னியும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவது குறிப்பிடதக்கது.தற்பொழுது சிறிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் பெரிய மாகாணங்களுக்கான வாக்கு எண்ணிக்கையை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
நிலவரம் :
மிட் ரோம்னி :173 வாக்குகள்
ஒபாமா :157 வாக்குகள்