ஆனந்த விகடனில் சில நாட்களுக்கு முன் முன்னாள் பெண்புலி தற்போது பாலியல் தொழிலாளி என்று ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தார்கள் . அதில் ஒரு பெண் போராளி பேட்டி கொடுத்தது போல் ஒரு கதையை எழுதி இருந்தனர். அந்தப் பெண் விடுதலைப் போராட்டம் என்பது இனி தேவை இல்லை எனவும் , தமிழகத் தலைவர்கள் ஈழத்து மக்களுக்காக எந்த போராட்டமும் செய்யத் தேவை இல்லை எனவும், தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் எனவும் அந்த பெண் போராளி பேட்டி அளித்திருந்தார். இது தமிழக தமிழர்களிடம் உலகத் தமிழர்களிடமும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது . அந்த கட்டுரைக்கு பதில் அளிக்கும் விதமாக ஈழத்து பத்திரிக்கையாளர்கள் தங்கள் எதிர்வினை கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் முன்னணி கள செய்தியாளர்கள் சிலரது கட்டுரை எதிர்வினை கட்டுரை இங்கே இணைத்துள்ளோம் .
ந.பரமேஸ்வரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்
ஈழத்தவர்களது இரத்தத்தையும், கண்ணீரையும் வர்த்தகம் செய்வது இவர்களுக்கு வழக்கமாகப்போய்விட்டது. அவர்கள் பிழைப்பு அவர்களுக்கு. இவர்கள் திருந்துவார்களென நான் நம்பவில்லை.
இ.தயாபரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்
தலைவர் - நிமலராஐன் ஞாபகார்த்த அமைப்பு
நாங்கள் தொப்புள் கொடி உறவென அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒட்டு மொத்தப் பெண் போராளிகளையும் கேவலப்படுத்தும் வகையினில் எழுதிக் கிழிக்கிறார்கள். விகடன் இதுவரை அர்ப்பணிப்புடன் செய்த சிலது கூட இக்கட்டுரையால் நாறடிக்கப்பட்டுவிட்டது. பாவம் அவர்களை சமூகம் உங்கள் கட்டுரைகளைப்; பார்த்து தவறாக எடை போட்டுவிட போகிறது. எமது அமைப்பு கூட சத்தமின்றி சத்திர சிகிச்சை தொழில் முயற்சியென பல உதவிகளை வழங்கிக்கொண்டேயிருக்கின்றது.
ஆ.சபேஸ்வரன் - ஊடகத்துறை விரிவுரையாளர்
உதவி ஆசிரியர், யாழ் தினக்குரல்
எங்களுக்காகக் கதைப்பதாகக் கூறிக் கொண்டே நாறடிக்கும் முயற்சி. தமிழக செயற்பாட்டாளர்களையெல்லாம் வம்புக்கு இழுத்து, சோர்ந்து போகச் செய்யும் நன்கு திட்டமிடப்பட்ட சதி முயற்சி. பின்னால்; இருப்பவர்கள் யார் என்று புரிகின்றது.
ந.பொன்ராசா - ஊடகவியலாளர் செயலாளர், வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம்
நாம் பகிரங்கமாகச் சவால் விடுகின்றோம். அவ்வளவு பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை முன்வைக்கும், பெண் போராளி விபச்சாரத்துக்குப் போவதாகச் சொல்கிறீர்களே விபரத்தைத் தாருங்கள். உதவுகின்றோம். அவ்வாறில்லாமல் இது பொய்யாகப் புனையப்பட்டதென்றால், அனைத்து பெண் போராளிகளிடமும் விகடன் மன்னிப்பு கோர வேண்டும்.
எம்.நியூட்டன் - ஊடகவியலாளர், வீரகேசரி
தடுப்பு முகாம்களிலும், பின்னரும் பெண் போராளிகள் மீதான துன்புறுத்தல்கள் எமக்கும் தெரியும். ஆனால் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வீம்புடன் வாழ முற்பட்டுள்ளதை நாம் ஊக்குவிக்கின்றோம். அவர்களைச் சமூகம் நிராகரித்துவிட்டதாக கூறுவது பச்சைப் பொய். அவர்களுக்கு உதவினால் பழிவாங்கப்படுவார்களென்ற அச்சம் உண்டு. அவ்வாறு உதவினால் காணாமல் போக கூட வேண்டியிருக்கும். அதையும் மீறி அவர்களைத் தூக்கிவிட கை கொடுத்தவாறு தான் இருக்கின்றார்கள்.
ஈழத்தமிழர்களது இரத்தமும், கண்ணீரும் பெரும்பாலும் தமிழக ஊடகங்களுக்கு சந்தை வாய்ப்பை கூட்டித்தரும் வணிகப் பொருட்களே. இப்போது அவர்களுக்கு விபச்சாரம் விற்பனைப் பொருளாகிறது. எந்தவொரு முன்னாள் போராளியும் விபச்சாரியாக இந்த தேசமும், உறவுகளும் விடப்போவதில்லை. அவ்வாறு அவர்கள் விபச்சாரியானாலும் நீங்கள் செய்யும் ஊடக விபச்சாரத்தினை விட அது ஒன்றும் மோசமானதல்ல.
விகடனில் வெளிவந்த பேட்டி குறித்து, ஆதி என்ற ஈழத்தமிழரின் எதிர்வினை இது...
"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் அருளினியனால் எழுதப்பட்டு விகடனில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில் முழுக்க முழுக்க போர்க்குற்ற ஆதார வாக்கு மூலம் இருந்தும் அதை மனித உரிமை அமைப்புகளுக்கோ சம்மந்தப்பட்ட விசாரணைக் குழுக்களுக்கோ அனுப்பாமல் வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி விகடன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறது.
சனல் 4 உட்பட எத்தனையோ ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்களுக்காக பல வழிகளிலும் தமிழ் மக்களின் நியாயத்திற்காக உலக அரங்கில் குரல் கொடுக்க விகடனோ ஒரு போராளியை விபச்சாரியாக்கி பணம் சம்பாதிக்கிறது.
விகடன் திருமாவேலனுடனும் அருளினியனுடனும் தொடர்பு கொண்டேன்
உண்மையாகவே இந்த வாக்கு மூலம் எடுக்கப்பட்டிருந்தால் அதை மனித உரிமை அமைப்புகளுக்கு போர்க்குற்ற ஆதாரா வாக்கு மூங்களாக அனுப்புங்கள் அல்லது என்னிடம் தாருங்கள் நான் அனுப்புகிறேன் என்று விகடன் "திருமாவேலனிற்கு" இன்று நண்பகல் முதல் இது வரை ஏராளமான அழைப்புகளை எடுத்துவிட்டேன்.
முதல் தடவை எனது அழைப்பை ஏற்ற அவர் "நான் ஆதி பேசுகிறேன்.... அருளினியனால் எழுதப்பட்ட கட்டுரை சம்மந்தமாக.." என்று உரையாடலை தொடரும் பொழுது "ஹலோ..ஹலோ... " என்ற படி அழைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு எல்லா அழைப்புகளையும் துண்டித்துக் கொண்டே இருக்கிறார்.
தவிர அருளினியனுக்கு அழைப்பை எடுத்து கேட்டேன்.. அவர் தான் விகடனின் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு வேலையாள் மட்டுமே என்று சொல்லியிருந்தார்.
"உங்களிடம் போர்க்குற்ற ஆதாரம் இருந்தும் அதை வெறும் சம்பளத்திற்காகவா மறைக்கிறீர்கள்" என்று கேட்டேன்... தன்னிடம் எதுவும் இல்லை நீங்கள் விகடன் அலுவலகத்திலேயே கேளுங்கள் என்று சொன்னார்.
ஆக பேட்டி உண்மை என்றால் சிறிலங்கா அரை காப்பாற்றுவதற்காகவா விகடன் போர்க்குற்ற ஆதாராங்களை சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு கொடுக்காமல் மறைக்கிறது??? சிறிலங்கா அமச்சர் ஒருவரும் பெண்கள் மீதான வன்முறையில் நேரடியாக ஈடுபட்டார் என்று பாதிக்கபட்ட பெண் கொடுத்திருக்கும் வாக்கு மூலத்தை விகடன் என்ன நோக்கத்திற்காக மறைக்கிறது??
அல்லது வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இதை எழுதியிருக்கிறார்கள்.
தவிர..
சுதந்திர மற்றும் ஆனந்தபுரச் சமர்களில் தனது பிள்ளைகளை தன் தாய் தகப்பனிடம் கொடுத்துவிட்டு களமாடியதாக சொல்லியிருக்கும் பெண் 3 வருடங்கள் கழித்து வந்து பிள்ளைக்கு பாலூட்டுவதற்காக பாலற்ற முலையை கொடுத்தாள் என்று அருளினியன் எழுதியிருப்பது அருளினியனின் கற்பனை வளத்தையும் விகடனின் காம வெறியையும் காட்டுகிறது.
அது போக யோ.கர்ணனை முள்ளிவாய்க்கால் வரை போராடிய முன்னாள் போராளி என்று எழுதியவர்தான் அருளினியன். ஆனால் யோ. கர்ணன் ஏற்கனவே விடுதலைப்புலிகள் அமைப்பின் தொலைக்காட்சி பிரில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பொம்பிளைப் பிள்ளைகளோடு அநாகரிகமாக நடக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்ட்டவர் என்பது ஊரறிந்த விடையம். இது புதுசாக முழைத்திருக்கும் அருளினியனுக்கோ விகடனுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதுபோக தமிழ்நாட்டு ஊடகங்களிற்கு ஈழத்தமிழர் பிரச்சினை என்பது வெறும் வியாபார நோக்கமே. தனது சொந்த சம்பள உயர்விற்காக, வலிகளை தாங்கி ஊமைகளாக போயிருக்கும் போராளிகளை கொச்சைப்படுத்தவும்.. தமிழீழ பெண்களை இழிவுபடுத்தவும் அருளினியன் ஆரம்பித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.
வாழ்நாளில் போர்களையோ அல்லது களம் நின்ற போராளிகளையோ சந்தித்திராத அருளினியனுக்கு எல்லாமே சினிமாவாகதான் தெரியும்.
போராளிகள் வறுமையில் இருக்கிறார்கள் ஆனால் யாரும் பிச்சையெடுக்கவில்லை. வாழ்வை எதிர்கொள்ளும் பலம் அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது!!!!
பேட்டி உண்மையென்றால்!!
தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட மிகக் கொடுமையான இன அழிப்பு போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி ஆதாரங்களை சேகரித்து ஆனால் தனது வேலை மற்றும் சம்பளத்தை தக்க வைத்து கொள்ளவதற்காக, அதை பகிரங்கப்படுத்தி நியாம் கேட்க வக்கில்லாத அருளினியனும் ஆதாரங்களை ஒளித்து வைத்து சிங்கள அரசிற்கும் இந்திய அரசிற்கும் சலியூட் அடிக்கும் விகடனும் தமிழீழ போர் பற்றியோ தமிழ் மக்களின் விடுதலை பற்றியோ கதைக்க அருகதையற்றவர்கள்.
வெறும் பணத்திற்காக சொந்த இன அழிப்பு ஆதாரத்தையே மறைக்கும் இவர்கள் இனிமேல் நடைப் பிணங்கள் தான்...
உண்மையிலேயே இனப் பற்று இருந்தால்... ஒடுக்கப்படும் இனத்திற்கான ஊடக நேர்மை இருந்தால் ஆதாரங்களை வெளிப்படுத்தி நியாயம் கேட்கட்டும்.. இல்லையேல் எம்மிடம் தரட்டும் அதை நாங்கள் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து நியாயம் கேட்போம்.
ஆதி