Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com
Showing posts with label Neelam. Show all posts
Showing posts with label Neelam. Show all posts

ஏழாவது முயற்சி வெற்றி: நடுக்கடலுக்கு சென்றது 'பிரதீபா காவேரி' கப்பல்!

சென்னையில் தரை தட்டிய பிரதீபா காவேரி கப்பல் இன்று மீட்கப்பட்டு விட்டது. நிலம் புயல் காரணமாக சென்னையில் பிரதீபா காவேரி என்ற கப்பல் தரைதட்டியது.

இந்நிலையில் இக்கப்பலை மீட்க இந்திய அரசு பல வகைகளில் முயற்சி மேற்கொண்டது. ஆனால் எந்த பலனுமில்லாமல் இருந்தது, இதைத் தொடர்ந்து, கப்பலின் உள் இருந்த தண்ணீரை வெளியேற்றி எடையைக் குறைத்து, பின் இழுவைக்கப்பல் மூலம் இழுத்ததில் கப்பல் நகர்ந்துவிட்டது.

இன்று ஏழாவது முறையாக மேற்கொள்ளப் பட்ட முயற்சியில் கப்பல் ஆழ்கடலுக்குள் சென்றது. இதனால் மீட்புப் பணியில் இருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் மீட்புப் பணியை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டார்.

ஆந்திராவில் நீலம் புயலினால் பெய்த மழை நேற்றுடன்

நீலம் புயலினால் ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களக பெய்த கன மழை நேற்றுடன் ஓய்ந்துள்ளது.

இந்த புயலுக்கு மாநிலத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 5 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் பயிரப்பட்டிருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக தகவல்கள தெரிவிக்கின்றன. மழையினால் ஏற்பட்ட வெள்ள நீர் சில மாவட்டங்களில் தேங்கியுள்ளது.

மாநிலத்தின் விஜயவாடா, காக்கிநாடா பகுதிகளில் சரியான மழைநீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் தொடர்ந்து வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

நேற்று மாநில உள்துறை அமைச்சர் சபிதா ரெட்டி மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அதிகாரியும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டனர்.

மேலும் அரசு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்வதில் தோற்று விட்டது என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் பார்வையிட வேண்டும் என்று தெலுங்கு சேதம் கட்சியின் தலைவர் முத்துகிருஷ்ணாம் நாயுடு கூறியுள்ளார்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஜாயாம்மா இது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பப்படும் என்று கூறியுள்ளார்.

ஆந்திராவில் நீலம் புயல் - கனமழைக்கு 29 பேர் உயிரிழப்பு

ஆந்திராவை தாக்கியுள்ள நீலம் புயலால் கனமழை பெய்து வருகிறது.இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.  


தமிழகத்தில் கரையைக் கடந்த நீலம் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்று கடுமையாக தாக்கியுள்ளது.இந்த நீலம் புயலால் ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது மேலும் பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாத்திக்கப்பட்டுள்ளது.தண்டவாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் கனமழை - 22 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் பெய்த கனமழைக்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரையைக் கடந்த நீலம் புயல் ஆந்திராவை தாக்கியுள்ளது.

நீலம் புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது.ஆந்திராவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பெய்த கனமழையால் அதிக அளவில் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன. மேலும் தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் பல பகுதிகளில் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் ஆந்திர முதல்வர் கிரண் குமார் இன்று வெள்ள நிலவரங்களை பார்வையிட உள்ளார்.

நீலம் புயலால் சேதங்கள்: நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வைகோ வலியுறுத்தல்!

வைகோ வேண்டுகோள்
வடகிழக்குப் பருவ மழையைத் தொடர்ந்து உருவான நீலம் புயலால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 இலட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன; இலட்சக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்துவிட்டன; வேர்க்கடலை உள்ளிட்ட மற்றப் பணப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயிகளும் பாதிப்புக்கு உள்ளாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாகவோ, பகுதி அளவிலோ சேதம் அடைந்து உள்ளன.

வேலூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் இறந்துவிட்டனர். சென்னையில் தரை தட்டிய பிரதிபா காவேரி என்ற சரக்குக் கப்பல் ஊழியர்கள், ஐந்து பேர் கடலில் மூழ்கி இறந்து உள்ளனர். மழை வெள்ளப் பாதிப்பினால் சுமார் 90 பேர் வரை இறந்து உள்ளனர்.

மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. பல இடங்களில் மின் விநியோகம் இல்லை. பல பள்ளிகளுக்குள் மழை நீர் தேங்கிக் கிடக்கின்றன. குழந்தைகளையும், வயோதியர்களையும் நோய்க் கிருமிகள் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து, தேவையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, வீடுகளை இழந்தவர்களுக்கு அரசுத் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர வேண்டும். மழை வெள்ளத்தால் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பெரும் சேதத்தை எதிர்கொண்டு உள்ள விவசாயிகளுக்கும் உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். மிகவும் மோசமாக சேதம் அடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மாநிலச் சாலைகள், மாவட்டச் சாலைகளை, போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர், ம.தி.மு.க.
தாயகம்

பட்டினப்பாக்கத்தில் தரை தட்டி நிற்கும் கப்பல்: கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்படும் அபாயம்!

கச்சா எண்ணெய் கசியும் அபாயம்!
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தரை தட்டி நிற்கும் கப்பலில் 360 டன் கச்சா எண்ணை இறக்கப்படாமல் உள்ளது. கப்பலின் அடிப்பகுதி மணலில் ஆழமாக புதைந்துள்ளது. தொடர்ந்து காற்று வீசுவதாலும், கடல் அலை காரணமாகவும் கப்பல் ஒரு புறமாக நகர்ந்து சாய்ந்து வருகிறது. இதனால் கப்பலின் அடிப்பாகம் சேதம் அடைந்து கச்சா எண்ணை கசிந்து கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடலோர காவல் படையினரும், சென்னை துறைமுக அதிகாரிகளும் கப்பலை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சிங்கப்பூர் நிபுணர்கள் ஆலோசனையின் பேரில் கப்பலை இழுவை கப்பல்கள் மூலம் நடுக்கடலுக்கு இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மும்பை, பாரதீப் துறைமுகத்தில் இருந்து 2 இழுவை கப்பல்கள் சென்னை வருகிறது.

அந்த கப்பல்கள் தரை தட்டிய கப்பலை இழுக்கும் சக்தி கொண்டது என்றாலும் இதிலும் சிக்கல் உள்ளது. கடலில் எரிபொருள் தீர்ந்து நிற்கும் கப்பலை இழுத்து வந்துவிடலாம். ஆனால் மண்ணில் புதைந்த கப்பலை இழுவை கப்பல்களால் மீட்க முடியுமா? என்ற சிக்கல் உருவாகி உள்ளது.

எனவே முதலில் கப்பலில் உள்ள 360 டன் கச்சா எண்ணையை மற்றொரு கப்பல் மூலம் வெளியேற்ற வேண்டும். அதன் பின்புதான் கப்பலை இழுக்கும் பணி தொடங்கும். இந்நிலையில் கப்பலை, சென்னையை விட்டு எங்கும் எடுத்து செல்லக் கூடாது என்று உயர்நீமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான நமது செய்தியைப் படிக்க தொடருங்கள்:
http://www.newsalai.com/2012/11/Case-filed-against-ship-owner-chennai-high-court-barrier-to-take-ship-out.html

சென்னையில் கரை ஒதுங்கிய கப்பல்: கப்பலை வெளியே கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் தடை!


செ‌ன்னை‌யி‌ல் தரை தட்டிய 'பிர‌தீபா காவே‌ரி' எ‌ன்ற சர‌க்கு கப்பல் வெளியே செல்வதற்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌ம் தடைவிதித்து‌ள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த நேசிலைச் சேர்ந்த சங்கர நாராயணன்தாக்கல் செய்துள்ள மனுவில், எனது மூத்தசகோதரர் ஆனந்த் மோகன்தாஸ் (32)பொறியாளர். அவர் ‘எம்.டி. பிர‌தீபா காவிரி’ என்ற கச்சா எண்ணெய் சரக்கு கப்பலில் 18.5.12 அன்று 2ம் நிலைஎன்ஜினீயராக பணியில் சேர்ந்தார். அது 4மாதங்களுக்கான ஒப்பந்தப்பணி.37 சிப்பந்திகளுடன் இந்த கப்பல் சென்னைக்குவந்து கச்சா எண்ணெயை சென்னை துறைமுகத்தில் இறக்கியது. கடலில்செல்லும் தகுதி அந்தக் கப்பலுக்கு இல்லை. அதில் போதுமான அளவுஎரிபொருளும் இல்லை. அங்கிருந்த ஊழியர்களுக்கு சம்பளமும்வழங்கப்படவில்லை. தங்களை விடுவிக்கும்படி ஊழியர்கள் கேட்டும் அதன்உரிமையாளர் செவிசாய்க்கவில்லை.

ஆனந்த் மோகன்தாசுக்கும் சம்பளம் தரப்படவில்லை. எனவே கப்பல் உரிமையாளருக்கு அவர் 3 முறை கடிதம் எழுதி, சம்பளம் தரும்படியும்,கப்பலில் இருந்து இறங்க அனுமதியும் கோரியுள்ளார். ஆனால் அதற்கானபதிலை உரிமையாளர் கொடுக்கவில்லை. எண்ணெயை இறக்கிய பிறகுதுறைமுகத்தின் வெளியே கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது.ஊழியர்களுக்கு உணவும், குடிநீரும் கொடுக்கப்படவில்லை. ஒருநாளுக்கு ஒருவேளைதான் உணவு கிடைத்திருக்கிறது. கப்பலில் மருத்துவ சிகிச்சைபெறவும் வசதி இல்லை.

எனவே எனது சகோதரர் மத்திய கப்பல்துறை, தமிழக உள்துறை செயலாளர்,தமிழ்நாடு டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், பட்டினப்பாக்கம்போலீஸ் இன்ஸ்பெக்டர், சென்னை துறைமுக அதிகாரிகள் ஆகியோரைபலமுறை தொடர்புகொண்டு, ஆபத்தான நிலையில் கப்பலில் இருக்கும்எங்களை காப்பாற்றுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் யாருமேஅவரது கூக்குரலை கவனிக்கவில்லை.

மத்திய அமை‌ச்ச‌ர் சரத்பவாரின் நெருங்கிய உறவினரின் கப்பல் அதுஎன்பதால் யாருமே எனது சகோதரர் உள்பட மற்ற ஊழியர்களின்கோரிக்கைகளை கவனிக்காமல் விட்டுவிட்டனர். துறைமுகத்துக்கு வெளியே 80 நாட்கள் நிறுத்தப்பட்டு இருந்தாலும்கூட அதிகாரிகள் யாரும் அதுபற்றிவிசாரணை கூட நடத்தவில்லை.

முக்கிய புள்ளியின் கப்பல் என்பதால், கடலில் பயணிக்கும் தகுதியை இழந்திருந்தாலும் 33 நாட்கள் கடலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுஇருந்தது.இந்த நிலையில் சென்னைக்கு புயல் அபாய எச்சரிக்கை வந்துசேர்ந்தது. எனவே ஒவ்வொரு ஊழியரும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் இறங்கினார்கள். உயிர்காக்கும் படகை உபயோகிக்கமுயன்றாலும், அதற்கு போதிய எரிபொருள் கிடைக்கவில்லை.

அங்கிருந்த 37 ஊழியரில், எனது சகோதரருடன் 22 பேர் உயிர்காக்கும் படகுமூலம் தப்ப முயன்றனர். ஆனால் அதில் போதிய எரிபொருள் இல்லாததால் படகு கவிழ்ந்துவிட்டது. அதைப் பார்த்த மீனவர்கள் சிலர் 15 ஊழியர்களை மீட்டனர். மீதமுள்ள 7 ஊழியர்களில் எனது சகோதரரும் ஒருவர். அவர்கடலில் விழுந்து இறந்துபோனார். மற்ற 6 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. 80 நாட்கள் சரியாக உணவு சாப்பிடாமல், பட்டினியாகஇருந்ததால் படகில் இருந்து விழுந்த சிறிது நேரத்தில் அவரது உயிர்போய்விட்டது. இது முழுக்க முழுக்க கப்பல் உரிமையாளரின் பொறுப்பற்றதன்மையால் நடந்த சம்பவமாகும்.

அதோடு, புயல் வருவதற்கு முன்பு எங்களை காப்பாற்றிவிடுங்கள் என்றுவிடுத்த கோரிக்கையை கேளாமல்போன அரசு அதிகாரிகளாலும் தான் இந்ததுயர சம்பவம் நேரிட்டுள்ளது. உணவு, குடிநீர் போன்றவை கொடுக்கப்பட்டுஇருந்தால் எனது சகோதரன் தனது உயிரை காப்பாற்றிக் கொண்டிருப்பார்.ஆனால் நீண்டநாட்கள் உணவின்றி இருந்ததால், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக செய்யும் அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் கூட அவருக்கு சக்தி இல்லாமல் போய்விட்டது.

அவரை இழந்து நாங்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சத்தை எங்களுக்கு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கும், கப்பல் உரிமையாளருக்கும் உத்தரவிட வேண்டும். அங்குநடந்த சம்பவம் பற்றி மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தஉத்தரவிட வேண்டும். இந்த வழக்கின் விசாரணை முடியும்வரை கப்பலை அங்கிருந்து செல்ல அனுமதிக்கக் கூடாது எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர். 

இ‌ந்த மனு நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் எஸ்.பிரபாகரன்,டி.பி.செந்தில்குமார், பி.எஸ்.அமல்ராஜ் ஆ‌கியோ‌ர் வா‌திடுகை‌யி‌ல், இந்தகப்பலின் ஏஜெண்டுக்கு கப்பல் நிர்வாகம் ரூ.1.5 கோடியை பாக்கிவைத்திருந்தது. எனவே ஏஜெண்டின் உதவிகூட அந்த கப்பல் சிப்பந்திகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அங்கிருந்த ஊழியர்கள் மட்டுமல்ல, ஊழியர்களின் உறவினர்கள்கூட அரசு அதிகாரிகள், கப்பல் உரிமையாளர், சென்னை துறைமுகத் தலைவர் உட்பட பலருக்கு உதவி கேட்டு இ-மெயில்அனுப்பினர்.

ஒரு பக்கத்தில் இருந்தும் உதவி கிடைக்கவில்லை.பசிக் கொடுமையால் சிலர் கப்பலில் இருந்த எலி, கரப்பான் பூச்சி போன்றவற்றை சமைத்து உணவாக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. 6 மாதங்களாக வைக்கப்பட்டு இருந்த ரொட்டிகளை சாப்பிட்டுள்ளனர். பட்டினியால் தொய்ந்துபோன அவர்களுக்கு தங்களை காப்பாற்றிக்கொள்ள பலமில்லாமல் போய்விட்டது.

ஏற்கனவே மனுதாரர் சகோதரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,இன்று மற்றொருவரின் உடல் கிடைத்துள்ளது. மீதமுள்ளவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் கப்பலை வெளியேற அனுமதித்தால் இழப்பீட்டை பெற முடியாமல் போய்விடும்.எனவே அதை சென்னையை விட்டு புறப்பட தடை விதிக்க வேண்டும் எ‌ன்றன‌ர்.

இ‌ந்த மனுவை ‌விசார‌ி‌த்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தர‌வி‌ல், இன்று மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் 6ஊழியர்களின் நிலைபற்றி அறியப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில்வாதிடப்பட்டது. மேலும், கப்பலை வெளியே செல்ல அனுமதித்துவிட்டால், இழப்பீட்டை பெற முடியாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளனர். இந்தவழக்கில் பதிலளிப்பதற்காக தமிழக அரசு அதிகாரிகளுக்காக சிறப்பு அரசுபிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நோட்டீஸ் பெற்றுக்கொண்டார். மத்தியகப்பல் துறைக்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு நோட்டீசைமனுதாரரின் வழ‌க்க‌றிஞ‌ர் கொடுக்க வேண்டும்.

கப்பல் உரிமையாளருக்கு தந்தி மூலம் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட வேண்டும்.இவர்கள் 6ஆ‌ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். இந்த நிலையில் பிர‌தீபாகாவிரி கப்பல், சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியே செல்லக்கூடாது என்று தடை ‌வி‌தி‌த்த ‌நீ‌திப‌தி, வழக்கு விசாரணை 7ஆ‌ம் தேதிக்கு தள்ளி‌வைத்தா‌ர்.

பிரதீபா காவேரி கப்பல் விபத்து: காணாமல் போன 5-வது ஊழியர் உடலும் மீட்பு!

கப்பல் ஊழியர்கள் தப்ப முயன்றபோது கவிழ்ந்த படகு.
 பெசன்ட் நகர் கடற்கரையில் அனாதையாக நின்று கொண்டிருந்தது!
நீலம் புயலால் தரை தட்டிய கப்பலில் இருந்து தப்ப முயன்ற ஊழியர்கள் ஐந்து பேரும் பலியாகிவிட்டனர். ஏற்கனவே நான்கு ஊழியர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 5-வது ஊழியரின் உடலும் கரை ஒதுங்கியது. இந்த உடலும் மீஞ்சூர் பகுதியிலேயே கரை ஒதுங்கியது. அந்த உடலை மீஞ்சூர் போலீசார் மீட்டு பொன்னேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அது ஜோமன் ஜோசப் உடலாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவரது உடலை உறவினர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது மின்சாரம் துண்டிப்பால் திருமலை இருண்டது

நீலம் புயலால் திருமலையில் பலத்த மழை பெய்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருமலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பக்தர்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

‘நீலம் புயல்’ சின்னம் கரையை கடந்து ஆந்திராவை நோக்கி சென்றதால் சித்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. திருப்பதி, திருமலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே வெள்ளம் ஏற்பட்டு, குளம்போல் காட்சி அளித்தது.

கோவிலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் திருமலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு வரும் மலைப்பாதையிலும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் செல்லும் மலைப்பாதையிலும் ஏராளமான மரங்கள் விழுந்து கிடந்தன. 2–வது மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இரு மலைப்பாதைகளிலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பதி கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி நாகசிவுடு, சாலை பணியாளர்களுடன் சென்று நேற்று காலை இரு மலைப்பாதைகளிலும் விழுந்து கிடந்த மரங்கள், சிறு சிறு பாறைகளை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினார். அதேபோல் தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு மற்றும் அதிகாரிகள் மலைப்பாதைகளில் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு பாறைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். பிறகு, வாகன போக்குவரத்து சீராக இயங்கின.

சித்தூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை ஆய்வு செய்வதற்காக முன்னாள் சித்தூர் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். சித்தூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் வழங்க ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

கன மழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சுமார் 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். எப்போதும் அலிபிரி மலைப்பாதை வழியாக 30 ஆயிரத்துக்கும் குறையாமல் பக்தர்கள் நடந்து வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஆனால், மழை காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 13 ஆயிரத்து 131 பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். 22 ஆயிரத்து 220 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 32 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டதால் கோவில் நிர்வாகம் சார்பில் லகு தரிசனம் (அருகில் நின்று தரிசனம் செய்தல்) ஏற்பாடு செய்யப்பட்டது.

நீலம் புயலுக்கு இலங்கையில் 6 பேர் பலி

இலங்கையில் நீலம் புயல் தாக்கியதை தொடர்ந்து, கடற்பகுதியில் வசிக்கும் 70,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த புயலில் 6 பேர் பலியானார்கள்.

கொழும்பில் உள்ள பல சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்துள்ளன. ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை அதிகாரிகள் நேற்று கொழும்பில் நிருபர்களிடம் கூறினார்கள்.

கடற்கரை பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு தற்காலிக முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் உள்ள பல்வேறு நீர்த்தேக்கங்களிலும், அணைகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் தரைதட்டிய கப்பலில் இருந்து காணாமல் போன 5 மாலுமிகளில் இரண்டு பேரது சடலம் மீட்ப்பு

சென்னையில் தரைதட்டிய கப்பலில் இருந்து காணாமல் போன 5 மாலுமிகளில் இரண்டு பேரது சடலம் இன்று காலையில் கரை ஒதுங்கியது.

சென்னை துறைமுகம் மற்றும் அண்ணா சமாதிக்கு பின்புறத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மேலும் 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

கடந்த 31ம் தேதியன்று சென்னையில் வீசிய நீலம் புயல் காரணமாக சென்னை துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு வந்த மும்பை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிரதிபா காவிரி என்ற கப்பல் பெசண்ட் நகர் கடற்கரை ஓரம் ஒதுங்கியது.

கடந்த 8ம் தேதி சென்னைக்கு டீசல் ஆயில் ஏற்றி வந்த இந்த கப்பல், பராமரிப்பு பணிகளுக்காக துறைமுகப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புயலின் தாக்கம் காரணமாக கப்பல் கரையை நோக்கி நகரத் தொடங்கியது. கப்பலில் இருந்த 30க்கும் அதிகமான பணியாளர்கள், அதனைக் கடலுக்குள் செலுத்த முயற்சி செய்தனர். ஆனால், அதற்கு கட்டுப்படாமல் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை அடித்துச் செல்லப்பட்ட கப்பல், பெசன்ட் நகர் பகுதியில் தரை தட்டியது.

கப்பலில் இருந்த பணியாளர்கள் சிலர் உயிர்காப்பு படகின் மூலம் கரைக்குச் செல்ல முயன்றனர். ஆனால், கடல் சீற்றம் காரணமாக எழுந்த அலைகளில் சிக்கினர். அப்பகுதியில் இருந்த மீனவர்கள், கடலில் குதித்து அவர்களைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், ஒருவர் உயிரிழந்தார். அவரது பெயர் ஆனந்த மோகன்ராஜ் என்றும், அவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

கப்பலில் இருந்த பணியாளர்கள் 31 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போனவர்களில் எஞ்சியிருக்கும் 3 பேரை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 42 சதவீதமழை கூடுதலாக பெய்துள்ளது ~ வானிலை மையம்

கரையைக்கடந்த நீலம் புயல் வலுவிழந்து கர்நாடகா மற்றும் ஆந்திராவையொட்டி சென்றது. தமிழ்நாட்டில் இதுவரை 42 சதவீதமழை கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

நீலம் புயல், சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக்கடந்தது. அதனால் சென்னை முதல் கடலூர் வரை அதிக வேகத்தில் காற்று வீசியது. ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன.

லட்சக்கணக்கான மரக்கிளைகள் முறிந்துவிழுந்தன. கரையைக்கடந்த புயல், புயல் சின்னமாக, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குறைந்து இறுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாறி கர்நாடகா மற்றும் ஆந்திரா அருகே சென்று உள்ளது.

இது பற்றி சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–

கரையைக்கடந்த நீலம் புயல், குறைந்த காற்றழுத்ததாழ்வு நிலையாக மாறி, கர்நாடகா மற்றும் ஆந்திராவையொட்டி உள்ளது. அது அப்படியே தரையில் வலுஇழக்க வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் அநேக இடங்களில் கனமழைபெய்யும்.

கேரளாவிலும் அநேக இடங்களில் மழைபெய்யும். தமிழ்நாட்டிலும்,புதுச்சேரியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் மழைபெய்யும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அக்டோபர் 1–ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 31–ந்தேதி வரை சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 18 செ.மீ. ஆனால் இந்த வருடம் அதாவது கடந்த(அக்டோபர்) மாதத்தில் 25 செ.மீ.மழைபெய்துள்ளது.

இது 42 சதவீதம் கூடுதல் மழைஆகும். அதுபோல தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி,மதுரை, நீலகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர்,தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழை பெய்துள்ளது.

மற்றபடி சென்னை உள்பட 24 மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. குறிப்பாக கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், நெல்லை, தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மிக அதிக மழைபெய்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் இன்னும் 2 மாதங்கள் உள்ளன. அதுபோல பெய்யவேண்டிய மழையின்அளவும் அதிகதேவை உள்ளது.காரணம் இன்னும் அணைகள், ஏரிகள் நிரம்பவில்லை.

வடதமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னையை கடந்த ‘நீலம்’ புயல் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்து விட்டது என்றும், இதன் காரணமாக வட தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்களில் ஒருவரான எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தை நோக்கி வந்த நீலம் புயல் நேற்று மாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. பின்னர், மேற்கு மற்றும் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா மாநிலம் ராயல்சீமா – அனந்தபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலைகொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உள்ள ஈரமான காற்றை ஈர்த்து வருகிறது. இதன் காரணமாக, வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை உள்ளிட்ட ஒருசில நகரங்களிலும் மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் தென் தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக ஏற்காட்டில் 24 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 20 செ.மீ. மழையும், வந்தவாசியில் 19 செ.மீ. மழையும், திருக்கோவிலூரில் 14 செ.மீ. மழையும், வானூர், திண்டிவனத்தில் தலா 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ராயல்சீமா – அனந்தபுரம் இடையே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது படிப்படியாக குறைந்து மறைந்துவிடும். அதனால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.

நீலம் புயலால் தமிழகத்தில் 8 பேர் உயிரிழப்பு

தமிழகத்தையே அச்சுறுத்தி கொண்டிருந்த நீலம் புயல் நேற்று மாலை சென்னை அருகே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது.

நீலம் புயல் நேற்று கரையை கடக்கும் போது கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழையும் பெய்தது.இதனால் சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் 250-க்கும் மேலான மின்கம்பங்கள் சாய்ந்தது.சென்னையில் பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்தது.பலத்த மழையால் பல இடங்களில் மரங்களும் வேரோடு சாய்ந்தன. இந்த புயலின் தாக்கத்தால் 

விழுப்புரம்,திருவண்ணாமலை,திருவள்ளூர்,சென்னை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் வேலூர் மாவட்டத்தில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நீலம் புயலின் தாக்கம் - இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

நேற்று கரையை கடந்த நீலம் புயலின் தாக்கத்தால் இன்றும் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் சென்னை,கடலூர், நாகப்பட்டினம் ராமநாதபுரம்,திருவண்ணாமலை,வேலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, கோவை,தருமபுரி,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டியில் குன்னூர்,கோத்தகிரி,குந்தா பகுதிகளில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் உருவாகி 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செலம்,கரூர்,ஈரோடு,பெரம்பலூர்,திருச்சி,தஞ்சை,திருப்பூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலம் புயல் கரையை கடந்தது

சென்னை மாமல்லபுரம் அருகே நீலம் புயல் கரையை கடந்தது. தமிழகத்தின் உள்மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வழியே பயணித்து வரும் புயல் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட முன்னதாகவே புயல் கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடையாறிலிருந்து மாமல்லபுரம் வரை மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. புயல் முழுமையாக கரையைக் கடந்த பின் மின் விநியோகம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் சாலைகளில் விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் கடலோரத்தில் வசித்து வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நீலம் புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. புயல் மற்றும் மழை பாதிப்புகளிலிருந்து மக்களை உடனடியாக மீட்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் உள்ளன. போக்குவரத்தை சரி செய்வது, வீழ்ந்துள்ள மின்கம்பங்களை அகற்றி மின்சாரத்தை சீராக வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புயலால் ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்றால் போக்குவரத்து பாதிப்பு

நீலம் புயல் கரையைக் கடந்து கொண்டிருப்பதன் எதிரொலியாக சென்னை கிண்டியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் விளைவாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் விழுந்த மரங்களை மக்களே அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மழையோடு சேர்ந்து வேகமான காற்று வீசியதால் பல மரங்கள் வீட்டுக் கூரைகளின் மேல் விழுந்தன. இதில் பல வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்த நிலையில், பாதுகாப்பு கருதி அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மதியம் இரண்டு மணிக்கே வீடுகளுக்குக் கிளம்பிவிட்டனர். இதனால் ரயில், பேருந்து, ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணித்தனர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்து கிடைக்காமல் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். இது மட்டுமின்றி, மழை காரணமாக செயிண்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது.

70 கி.மீ வேகத்தில் மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் நீலம் புயல்

மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்க்கும் இடையே தற்போது புயல் கரையை கடந்துகொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மணிக்கு 70 கி.மீ வேகத்தில் மாமல்லபுரத்தில் கரையை கடந்து கொண்டிருக்கிறது நீலம் புயல். மாமல்லபுரத்தில் 10 உயரத்திற்கு கடலலை எலும்புவதாகவும் மரங்கள் படிப்படியாக சுழன்று சுழன்று விழுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல் கிடைகிறது.

மற்றும் கூடுதல் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களை இன்னும் 5 மணித்தியாலங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் கூட இதுவரைக்கும் 84 மரங்கள் புயலால் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

புயல் கரையை கடந்துமுடிக்க இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகின்றது.

வானிலை மையம் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே புயல் கரையை கடக்க ஆரம்பித்துவிட்டதாக மேலதிக தகவல்கள் கூறுகின்றன.

கோவளம், மாமல்லபுரம் ஆகிய தாழ்வான பகுதியில் இருந்து 5000 பேர் வெளியேற்றம் செய்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

சென்னையில் தொடர்ந்து 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசிவருகின்றது.

சென்னையில் புயல் அறிகுறி மிக வேகமாக தொடக்கம் (படங்கள், காணொளி)

சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் நீலம் புயல் வந்துகொண்டிருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு  110 கி.மீ. வேகத்தில்  காற்று வீசும் என அறிவித்துள்ளனர்.







நீலம் புயலுக்காக ஆயத்தமாகும் சென்னை (காணொளி)

நீலம் புயலில் சிக்கிய சரக்குக்கப்பல் இலங்கை கடற்பரப்பில் மூழ்கியது


நீலம் புயலில் சிக்கிய வியட்னாமிய சரக்குக் கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. 


இதில் பயணம் செய்த கப்பலின் தலைவன் உள்ளிட்ட 4 மாலுமிகள் காணாமற்போயுள்ளனர். 

மியான்மாரில் இருந்து இந்தியாவுக்கு 6500 தொன் மரம் ஏற்றிச்சென்ற சாய்கோன் குயீன் என்ற சரக்குக் கப்பலே இலங்கை கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. 

நேற்று அதிகாலை 12.15 மணியளவில், இலங்கை கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஆபத்தில் சிக்கியுள்ளதாக இந்தக் கப்பலில் இருந்து உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்டது. 

நீலம் புயலில் சிக்கியதால், இந்தக் கப்பலுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. 

இதையடுத்து இலங்கை,அமெரிக்க கடைலோரக் காவல்படை மற்றும் கப்பல்களின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டது. 

நேற்றிரவு 9.20 மணியளவில், கிரேக்க கப்பல் ஒன்று 3 மாலுமிகளை மீட்டது. 

மற்றொரு மிதவைப்படகில் இருந்து 16 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று மாலுமிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
[vuukle-powerbar-top]

Recent Post