மணிக்கு 70 கி.மீ வேகத்தில் மாமல்லபுரத்தில் கரையை கடந்து கொண்டிருக்கிறது நீலம் புயல். மாமல்லபுரத்தில் 10 உயரத்திற்கு கடலலை எலும்புவதாகவும் மரங்கள் படிப்படியாக சுழன்று சுழன்று விழுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல் கிடைகிறது.
மற்றும் கூடுதல் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களை இன்னும் 5 மணித்தியாலங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் கூட இதுவரைக்கும் 84 மரங்கள் புயலால் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
புயல் கரையை கடந்துமுடிக்க இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகின்றது.
வானிலை மையம் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே புயல் கரையை கடக்க ஆரம்பித்துவிட்டதாக மேலதிக தகவல்கள் கூறுகின்றன.
கோவளம், மாமல்லபுரம் ஆகிய தாழ்வான பகுதியில் இருந்து 5000 பேர் வெளியேற்றம் செய்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
சென்னையில் தொடர்ந்து 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசிவருகின்றது.