தமிழகத்தையே அச்சுறுத்தி கொண்டிருந்த நீலம் புயல் நேற்று மாலை சென்னை அருகே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது.
நீலம் புயல் நேற்று கரையை கடக்கும் போது கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழையும் பெய்தது.இதனால் சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் 250-க்கும் மேலான மின்கம்பங்கள் சாய்ந்தது.சென்னையில் பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்தது.பலத்த மழையால் பல இடங்களில் மரங்களும் வேரோடு சாய்ந்தன.
இந்த புயலின் தாக்கத்தால்
விழுப்புரம்,திருவண்ணாமலை,திருவள்ளூர்,சென்னை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் வேலூர் மாவட்டத்தில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
