கடந்த இரு நாட்களாக கூடங்குளம் அணுஉலையில் இருந்து பாரிய சத்தமும் புகைகளும் வந்தவண்ணம் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கூடங்குளம் அணுஉலையில் இருந்து சத்தத்துடன் கூடிய கரும்புகை வருவதால் அணுஉலையை சுற்றியுள்ள கிராமங்களான கூடங்குளம், வைராவிகிணறு, இடிந்தகரை கிராம மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடங்குளம் அணுஉலையை திறப்பதற்கான ஆயத்த வழி நடந்துகொண்டிருக்கும் நிலையில் இப்போது இவ்வாறன சத்தம் கேற்பது அணுஉலையை இயக்க தொடங்கிவிட்டார்களோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் பீதியாகியுள்ளது.
இதை தொடர்ந்து அணுஉலை எதிர்ப்பாளர்கள் உடனடியாக அவசர கூட்ட ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
