Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு !


பப்பாளி இலைச் சாறு டெங்குக் காய்ச்சலிலிருந்து
                         உயிர்களைக் காப்பாற்றும்!

                           எழுத்தேணி அறக்கட்டளைச் செயலர் அறிக்கை.
                                 ---------------------------------------------------


பப்பாளி இலையை நன்கு அலசி அதன் காம்பையும் நரம்புகளையும் எடுத்துவிட்டுச் சாறுபிழிந்து ஒரு வேளைக்கு 2 தேக்கரண்டி வீதம்,  அதிகாலையில் 3 நாள் குடித்தால் டெங்குக் காய்ச்சல் நீங்கும். இக்காய்ச்சல் தொண்டைவலி, இருமல், சுரம் ஆகிய அறிகுறிகளுடன் வரும். இரத்தத்தில் உள்ள பேலடெலேட் என்னும் அணுக்கள் 5,0000-க்குக் கீழேயும் குறைந்துவிடும். பப்பாளி இலைச் சாறு கொடுத்ததுமே முதல் நாளிலேயே ஓரிலட்சம் அணுக்களாகி  அடுத்த நாளே இரண்டு இலட்சத்தை எட்டிவிடும்.  

அண்ணா மருத்துவமனை சித்தமருத்துவ நூல்வெளியீட்டுப் பிரிவு முன்னாள்   சிறப்பு அதிகாரி முனைவர் ஆனைவாரி ஆனந்தனும் இயற்கை மருத்துவர்  செல்வி தமிழ்க்குயில் அவர்களும் இதனை உறுதி செய்தனர். இதனை உடனடியாக அண்ணா சித்த மருத்துவமனையும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவ மனையும் உறுதி செய்து,  தமிழக அரசு மக்களிடம் நோய் பரவுகிற இடங்களில் – ஊர்களில் இச்செய்தியைப் பரப்பி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்!- என்று எழுத்தேணி அறக்கட்டளைச் செயலரும் பேராசிரியருமாகிய இறையரசன் தெரிவித்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post