Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இதோ வந்துவிட்டது பெண்களுக்கான 'வயாக்ரா': ஆஸ்திரேலிய மருத்துவர்களின் அட்டகாச கண்டுபிடிப்பு!

Creative Commons License
பெண்களுக்கான 'வயாக்ரா'-கட்டுரை by ராஜ்தியாகி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 3.0 Unported License.
Permissions beyond the scope of this license may be available at rajtyagi@newsalai.com.
பெண்களுக்கான 'வயாக்ரா': மருத்துவ உலகின் புதிய சாதனை!
உலகில் உள்ள 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 'அனார்காஸ்மியா' எனப்படும் 'உடலுறவு ஆர்வ மற்றும் உச்சகட்ட உணர்ச்சி இழப்பு' எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உடலுறவில் பெண்கள் ஆர்வமின்றி செயல்படுவதால் அவர்களுக்கு சோர்வு, மன அழுத்தம், கணவர் மேல் அன்பில்லாமல் இருத்தல் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. இவை சில நேரங்களில் மண வாழ்க்கையையே முறித்து விடக் கூடும். 

இதற்கு மருத்துவ ரீதியாக எந்த தீர்வும்  இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது  ஆஸ்திரேலிய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள மருந்தானது, பெண்களின் காம உணர்ச்சியை அதிகரித்து, அவர்களை எளிதாக உச்சகட்டம் அடையச் செய்யும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மருந்தை எடுத்துக்கொண்டால், பெண்களுக்கு உடனடியாக கிளர்ச்சி ஏற்படும். மேலும், ஆரோக்கியமான இல்லற வாழ்க்கையை ஏற்படுத்த இந்த மருந்தால் முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி. 

'டேபினா' என்று இந்த மருந்து பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருந்தை எடுத்துக் கொண்ட 2 மணி நேரங்களுக்குப் பின்னர், பெண்களுக்கு காம உணர்வு அதிகமாகுமாம். இந்த  மருந்தைப் பற்றிய பரிசோதனை அமெரிக்காவிலும், கனடாவிலும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மருந்து 'நாசல் ஸ்ப்ரே' (Nasal Spray) வடிவில் கூடிய சீக்கிரம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

-ராஜ்தியாகி
[vuukle-powerbar-top]

Recent Post