"துப்பாக்கி" படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளும், வசனங்களும் இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது எனக்கூறி "துப்பாக்கி" படத்திற்கு எதிராகவும், நடிகர் விஜயிற்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தது யாவரும் அறிந்ததே.
இப்போராட்டங்கள் காரணமாக, சர்சைக்குரிய ஐந்து பகுதிகளை இப்படத்திலிருந்து நீக்கியுள்ள படக்குழுவினர்,சில வசனங்களையும் மறைத்துள்ளனர்.இவ்வாறு காட்சிகள் நீக்கப்பட்டதன்பின்னர் புதிய "துப்பாக்கி" படத்திற்கான குறுந்தட்டை சென்னையில் உள்ள மாநகர காவல் துறை ஆணையாளரிடம் சமர்பித்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
இதற்கிடையே அத்தனை சர்ச்சைகளையும் தாண்டி மிக வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது "துப்பாக்கி" திரைப்படம்.அத்தோடு ஏற்கனவே இப்படத்தை பார்த்து இரசித்திருந்த இரசிகர்களுக்கு, சில காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னர் இப்படத்தை மீண்டும் ஒரு முறை காண வேண்டும் என்ற ஆவல் பிறந்துள்ளது.