![]() |
தாத்தா அணிந்திருக்கும் புதிய உடை! |
சீனாவை சேர்ந்தவர் லீ சியன்பிங். இளம்பெண்கள் அணியும் உடைகளை அணிந்து இவர் போஸ் கொடுக்கும் படங்கள் தற்போது இணைய உலகை கலக்குகின்றன. லீயின் பேத்தி கடந்த மே மாதம் பெண்கள் அணியும் பேஷன் உடைகள் விற்கும் கடை ஒன்றை ஆரம்பித்தார். எதிர்பார்த்த அளவில் வியாபாரம் சரியாக போகவில்லை. இதனால் வித்தியாசமாக சிந்தித்த லீயின் பேத்தி, தனது தாத்தாவையே மாடலாக ஆக்கினார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் சக்கைப் போடு போடுவதுடன் அவரது வியாபாரமும் அதிகரித்துள்ளதாம்.