அமெரிக்காவின் நெவேடா பாலைவனத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய சக்தி மின் நிலையம்! |
நீங்கள் அணு உலையை ஆதரிப்பவராக இருந்தால், சோலார் பேனல்கள் மற்றும் சோலார் மின்சாரம் தயாரிப்பாளர்களின் ஆண்டு இறுதி அறிக்கையை பார்த்து உண்மையில் வியந்து போவீர்கள். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டின் மத்தியிலேயே அவை பெரும் வளர்ச்சியையும், லாபத்தையும் அடைந்துள்ளன.
2012-ஆம் ஆண்டில் அமெரிக்காவை சோலார் பேனல் மின்சார சக்தி திட்டங்கள் தான் ஆக்கிரமித்து இருக்கும். அந்த துறையின் வளர்ச்சி சீராக, நன்றாக வளர்ந்து வருகிறது என அமெரிக்காவில் உள்ள 'சூரிய எரிசக்தி தொழில் கூட்டமைப்பின்' ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.
இதுவரை 742 மெகாவாட் பெறுகிற அளவுக்கு சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. 2012 இரண்டாம் காலாண்டில் இரு மடங்கு சூரிய தகடுகளின் தேவை அதிகரித்து இருக்கிறது.
இந்த ஆண்டு 3.2GW இரண்டு பயன்பாட்டு அளவு சோலார் பேனல்கள் திட்டங்கள் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் நிறுவப்பட்ட இருக்கின்றன. 447 மெகாவாட் மற்றும் இன்னும் 20 திட்டங்கள் மூலம், மிகப்பெரிய சோலார் தகடுகளின் தேவைகள் அதிகரித்து இருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா, அரிசோனா, மற்றும் நியூ ஜெர்சி போன்ற சில முக்கிய மாநிலங்களில் சோலார் வளர்ச்சி திட்டங்களுக்காக தனிப்பட்ட அரசு கொள்கைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.
கலிபோர்னியாவில் சூரிய திறன் ஒரு கணிசமான அளவு ஏற்கனவே உள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அணு உலை, நிலக்கரி பயன்படுத்தப்படும் அனல் மின் நிலையம் ஆகியவற்றுக்கு மாற்றாக சோலார் மின்சாரம் வளர்ந்து வருவதையும், வளர்ந்தாக வேண்டிய கட்டாயத்தையும் பற்றிய கட்டுரையை இந்த வாரம் வெளியிட்டு இருக்கிறது. சோலார் சக்தியினை பற்றிய யோசனைக்கு இதுவே உகந்த நேரம் என்று அது வர்ணித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கூடங்குளத்தை மூடும் நேரமிது.