Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

60 அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்துகிறது பிரித்தானியா

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 அகதிகளை, பிரித்தானியா வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு  நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. 

இதற்கு எதிராக வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஹீத்ரோவுக்கு அருகில் உள்ள ஹார்மொன்ஸ்வோர்த், கோல்புறூக் தடுப்பு முகாம்களுக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அகதிகள் அங்கு கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படக் கூடிய, கொல்லப்படக் கூடிய ஆபத்துக் கூட உள்ளதால், அதனைத் தடுத்து நிறுத்த முன்வருமாறு பிரித்தானிய அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post