காத்தான்குடி உட்பட கிழக்கு கரையோரத்தில் கரையொதுங்கும் மீன்களை உண்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு கிழக்கு பல்கலைகழக விலங்கியல் திணைக்கள போதனாசிரியர் அறிவித்துள்ளார்.
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கும் மீன்களை பரிசோதனை செய்யவென குறித்த பிரதேசத்திற்கு சென்ற கிழக்கு பல்கலைகழக விலங்கியல் திணைக்கள ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் ஆய்வின்போதே இதனைத் தெரிவித்தனர்.
நீர்மாதிரிகளின் தரம் மற்றும் கரையொதுங்கிய மீன்களின் தசை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதன் முடிவுகள் ஆராய்ச்சிகளின் முடிவிலேயே அறிவிக்க முடியும். எனவே அதுவரை இம்மீன்களை உண்ணுவதை தவிர்க்குமாறு அவர் அறிவித்துள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கதிற்கு முன்னரான நாட்களில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் பெருமளவான கடல் மீன்கள் கரைஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.