கோஸ்ட ரிகா நாட்டின் தலைநகர் சான் ஜோசுக்கு 45 கி.மீ தூரத்தில் உள்ள எரிமலை ஒன்று வெடித்ததன் காரணமாக, அங்கு, 9,840 அடி உயரத்துக்கு தூசும், புகை மண்டலமும் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள நூற்றுக் கணக்கான மக்கள் மூச்சுத் திணறலாலும், தோல் வியாதிகளாலும் அவதியுற்று வருகின்றனர். அனைவரையும் நுரையீரல் மற்றும் தோலை காப்பாற்றும் பொருட்டு மாஸ்க் அணியுமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. புகை மண்டலம் காரணமாக அங்கு பள்ளிகள் மூடப்பட்டு, விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.