நாடு முழுவதிலும் 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 மாணவ மாணவிகள் எழுதிய 12-ஆம் வகுப்பிற்கான சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
மாணவிகள் 88.585 சதவீதமும், மாணவர்கள் 78.85 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், டெல்லி மாண்ட்போர்டு பள்ளியை சேர்ந்த சுக்ரிதா குப்தா என்ற மாணவி 500க்கு 497 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
496 மதிப்பெண்களுடன் கோயல் என்ற மாணவி 2ஆம் இடத்தையும், 495 மதிப்பெண்கள் பெற்று சென்னையை சேர்ந்த அஜிஸ் சேகர் என்ற மாணவர் 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.