Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விஜயகாந்த் மகிழ்ச்சியாக இருக்கிறார்: திருமாவளவன்

மக்கள் நலக்கூட்டணியினர் தொடர்ந்து ஒன்றாக செயல்படுவோம் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து விஜயகாந்த் அவர்கள் எவ்வித மனவருத்தத்திலும் இருப்பதாக தெரியவில்லை என்றும் எங்களுடன் பேசுகையில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் என கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவின் தேர்தல் முறைதான் அத்தனை ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமாக இருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பதை தவிர்த்துவிட்டு, தங்களுக்கு யார் தலைவர்களாக வரவேண்டுமோ அவர்களுக்கு வாக்களியுங்கள் அல்லது புது தலைவர்களை தேர்ந்தெடுங்கள் என கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post