2 நாள் பயணமாக நேற்று ஈரான் தலைகர் தெஹரான் சென்ற மோடி, அந்நாட்டு தலைவர் அயோதுல்லா அலி கமேனி மற்றும் அதிபர் ஹசன் ரவுகானி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அப்போது, ஈரானின் சபஹர் துறைமுகத்தை பிராந்திய மையமாக மேம்படுத்த வகை செய்யம் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. முன்னதாக, நேற்று, தெஹரானில் உள்ள குருத்வாரா ஒன்றுக்கு சென்ற மோடி, அங்கு இந்தியா–ஈரான் கலாசாரம் தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றை தொடங்கி வைத்தார்.