கடந்த ஜனவரி மாதம் தைவானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 56.2 சதவீத வாக்குகளை பெற்ற ஜனநாயக சுதந்திர முற்போக்கு கட்சி வேட்பாளர் சை இங்க் வென், அந்நாட்டின் முதல் பெண் அதிபராக இன்று பதவியேற்க உள்ளார்.
தைவானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, மற்றும் சீனாவுடனான உறவு ஆகியவை புதிய அதிபருக்கு சவாலான விஷயங்களாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தைவானின் ஜனநாயகத்தை சீனா மதிக்க வேண்டும் என சை இங்க் வென் வலியுறுத்தியுள்ளார்